சென்னை: எடிசன் பழனியப்பன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ப.இளங்கோவன் தயாரித்து இயக்கி உள்ள படம் ‘காக்கி வாடன் பட்டி’.
இதன் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடந்தது. படத்தின் இசைத்தகடை இந்தியன் பிலிம் புரடியூசர் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர் யூனியன் டிரஸ்ட் தலைவர் பிரியா நாயர் வெளியிட கோயம்புத்தூர் அறிஞர் அண்ணா சமூக நல அறக்கட்டளை தலைவர் சி. ஆர். சர்வேஷ் பெற்றுக் கொண்டார். படத்தைப் பற்றிய இயக்குனர் ப.இளங்கோவன் கூறுகையில், ‘‘குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு கம்பெனியை அப்புறப்படுத்த போராடும் சமூக ஆர்வலர் அவருக்கு உதவும் ஹீரோ மற்றும் அவரின் நண்பர்கள் எனச் சுற்றி கதை நடக்கிறது .இதில் சமூக ஆர்வலராக அன்பு நடிக்க, கதையின் நாயகனாக ஹரி மற்றும் சுசீந்திரன் நடித்துள்ளனர். மேலும் நாயகியாக பிரியா பால்ராஜ் நடிக்க, வில்லனாக சாலை முருகன் நடித்துள்ளார். ஒளிப்பதிவு – ஜெயபால் மாணிக்கம் மற்றும் சம்பத்குமார், இசை – கௌதம் சந்திரன் மற்றும் தன்ராஜ் மாணிக்கம்’’ என்றார்.
