அம்மாவாக பதவி உயர்வு பெற்ற ஹீரோயின்கள்

ரெபா மோனிகா ஜான், அவரது கணவர் ஜோமோன் ஜோசப் தம்பதி, தங்களது முதல் குழந்தையை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதற்கு ‘கியாரா ஜோசப்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரெபா மோனிகா ஜான், தனது மகள் கடந்த 22ம் தேதி பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரும், ஜோமோன் ஜோசப்பும் 3 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022 ஜனவரி 9ம் தேதி அவர்களின் திருமணம் நடந்தது. விஜய் நடித்த ‘பிகில்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ரெபா மோனிகா ஜான், தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கும் அவருக்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய ஷிரின் காஞ்ச்வாலா, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். சிபிராஜின் ‘வால்டர்’, சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’, புகழ் நடித்த ‘ஜூ கீப்பர்’ உள்பட சில படங்களில் நடித்த அவர், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அசார் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 2024 நவம்பர் 29ம் தேதி மும்பையில் திருமணம் நடந்தது. சமீபத்தில் சோஃபியா முன் என்ற ஒரு பெண் குழந்தைக்கு ஷிரின் காஞ்ச்வாலா தாயானார். அதுபோல், தனது 45வது வயதில் ஒரு குழந்தைக்கு பத்மப்பிரியா தாயானார். ஜூலை மாதத்தில் அம்மாவாக பதவி உயர்வு பெற்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Stories: