சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை

மும்பை: கரண் ஜோஹர் இயக்கிய ‘குச் குச் ஹோதா ஹே’ இந்தி படத்தில் ஷாருக்கான் மகளாக நடித்தவர் சனா சயீத். இப்போது வளர்ந்துவிட்ட அவர், சில இந்தி படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஏற்பட்ட புலிமியா நோய் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். புலிமியா நோய் என்பது நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க தோன்றும் ஒரு வகை நோயாகும்.

இதனால் உடல் பருமனாகி கடும் மன அழுத்தத்தில் சனா சயீத் இருந்துள்ளார். இந்த உலகத்தில் தனக்கு மட்டுமே இந்தத் தொந்தரவு இருப்பதாக எண்ணி, தனக்குள்ளேயே மிகுந்த அவமானத்தையும் மனவேதனையையும் சுமந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகள் தான் என்ன மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற பெயரே தெரியாமல், இதிலிருந்து மீளவும் ஆரோக்கியமாக சாப்பிடவும் சனா சயீத் ஏங்கியுள்ளார்.

தற்செயலாக இந்நோய் தொடர்பான ஒரு புத்தகத்தைப் படித்தபோதுதான், தனக்கு இருப்பது புலிமியா நோய் என்பதை அவர் புரிந்துகொண்டார். அதன் பிறகே உண்மையான சிகிச்சை தொடங்கி, முழுமையாகக் குணமடைய 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்போது நான் நலமாக இருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

Related Stories: