டேட்டிங் ஆப் தொடங்கிய ராய் லட்சுமி: ரசிகர்கள் ஆவேசம்

சென்னை: நடிகை லட்சுமி ராய், தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தொடங்கியுள்ள டேட்டிங் ஆப்பிற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தொழிலதிபர்களாக பல நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வரிசையில் நடிகை ராய் லட்சுமி புது பிசினஸில் களமிறங்கி உள்ளார். தற்போது இவர், லா ரா என்ற புதிய மொபைல் ஆப் தொடங்கியிருக்கிறார். ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேசிய நடிகை ராய்லட்சுமி, ‘‘ஒருவர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த ஆப் இருக்கும், பல விதமான டேட்டிங் ஆப்கள் இருக்கின்றன.

ஆனால், அவை நம்பிக்கைக்குரியதாக இல்லை, அதுமட்டுமின்றி, வெறும் டேட்டிங் ஆப்-ஆக மட்டுமில்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொழில்முறை நபர்களை இணைக்கும் நெட்வொர்க்கிங் தளமாகவும், நிஜ சந்திப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது செயல்படும்’’ என்றார். இது குறித்து அறிந்த அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், கருத்து தெரிவிக்கும்போது, ‘இது தேவையில்லாத ஒன்று, இளைஞர்களை கெடுக்கும் இதுபோன்ற ஆப்களை ஊக்குவிக்கக்கூடாது’ என்று சரமாரியாக ராய் லட்சுமியை விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories: