மல்யுத்த வீராங்கனைகள் பலாத்கார புகார்; பாஜக மாஜி எம்பி விடுதலை: டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பாஜக முன்னாள் எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி வகித்த காலத்தில், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக, டெல்லி போலீசார் பிரிக்பூஷன் சரண் சிங் மற்றும் அமைப்பின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் மீது 2023ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் சுமார் 1500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விசாரணையை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் அனைத்து விசாரணை மற்றும் இறுதி வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் அஸ்வனி பன்வார் இன்று தீர்ப்பளித்தார். மூடிய அறையில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிக்பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகிய இருவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டது.

புகார்தாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜான் மற்றும் பிரதிவாதிகள் தரப்பில் வழக்கறிஞர் ராஜீவ் மோகன் ஆகியோர் வாதங்களை முன்வைத்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் முழுமையாக பரிசீலித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

Related Stories: