தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்ற நிலுவையில் 158 சிபிஐ வழக்குகள்: 20 ஆண்டாகியும் விசாரிக்கவில்லை

புதுடெல்லி: அரசு பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில், 158 வழக்குகளில் சிபிஐ விசாரணை முடிந்தும், நீதிமன்றங்களில் விசாரணை தொடங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வழக்குகள் 20 ஆண்டுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படவில்லை.

வினாத்தாள் கசிவை தடுக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்குகளை கையாள பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் விரைவு நீதிமன்றங்களுக்கு இந்த நிலுவை வழக்குகளை மாற்ற சிபிஐ முடிவு செய்துள்ளது. இந்த வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும், தேவையான அனைத்து வளங்களை வழங்கவும் சிபிஐ தயாராக உள்ளதாக உயர் நீதிமன்றங்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத்தின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விரைவு நீதிமன்றங்களில் விசாரித்து முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: