திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டி, ஆக.2: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு வளரும் தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு நிலவுவதாகவும், மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த தற்காலிக பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பில் அரசு மருத்துவமனை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டச் செயலாளர் சிங்கை சரவண சோழன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பையும் மருத்துவ சேவையின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனை முன் குவிந்தனர்

 

Related Stories: