25,000 நெல் மூட்டைகள் மழையில் சேதம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக பரவலூர், கோமங்கலம் மற்றும் ஆலிச்சிக்குடி ஆகிய 3 கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடுமையாக சேதமடைந்துள்ளன.

Related Stories: