திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 7 காவலர்கள், குற்ற வழக்குகளின் முக்கியக் கோப்புகளையும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மின்னணு ஆதாரங்களையும் சரியான முறையில் பராமரிக்காமலும், முறைப்படுத்தாமலும் அலட்சியமாகச் செயல்பட்டதும், வழக்குகளுக்காக லஞ்சம் பெற்றதும் எஸ்.பி நேரடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காவலர்கள் கண்ணன், ராம்குமார், பாலச்சந்திரன், ராஜேந்திரன், அர்னால்ட், மணிகண்டன், திருவேங்கடம் ஆகிய 7 பேரை உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி அதிரடி ஆணை பிறப்பித்தார்.
