துப்பாக்கியுடன் போதை கும்பல் சிக்கியது: நெல்லையில் பரபரப்பு

நெல்லை: நெல்லையில் நேற்று அதிகாலை போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாளை வெள்ளக்கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த 5 பேர் கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா, அபின், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரித்தனர். அதில் பாளை வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த சிவா (31) மற்றும் இசக்கிமுத்து ஆகியோர் போதை பொருட்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து, போலீசார் வெள்ளக்கோவில் பகுதிக்கு சென்றபோது, சிவாவும், இசக்கி முத்துவும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கினர்.

அப்போது சிவா, மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி தவறி கீழே விழுந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சிவா மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சென்னையில் பல லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: