அன்று மக்கள் பணம் மக்களுக்கே இன்று கார்ப்பரேட்களுக்கே: மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சென்னை: அன்று மக்கள் பணம் மக்களுக்கே, இன்று கார்ப்பரேட்களுக்கே என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் (ஜூலை 19, 1969) கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் துணிச்சலுடன் தேசியமயமாக்கியது அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு. அன்று:

பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க தனியார் வங்கிகளை அரசுடமையாக்கிய தொலைநோக்கு பார்வை. இன்று: பாஜவின் ‘‘ டபுள் இன்ஜின்” ஆட்சியில், மக்களின் பொதுத்துறை வங்கிகளை இணைத்து சுருக்கியும், பொதுச்சொத்துகளை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்தும் வருகின்றனர். அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று மக்கள் பணம் கார்ப்பரேட்களுக்கே. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: