2027 கேட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு: ஆக.3வது வாரம் தொடக்கம்

 

சென்னை: மத்திய அரசு கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். கேட் நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஓர் ஐஐடி அல்லது ஓர் ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) நடத்தும். அந்த வகையில் 2027ம் ஆண்டு கேட் நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பு சென்னை ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2027 கேட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி நேற்று வெளியிட்டது.

அதன்படி 2027 கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் 30 பாடங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் புதிதாக ‘ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்’ பாடம் சேர்க்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2027 கேட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் தொடங்க உள்ளது. மாணவர்கள் இத்தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் https://gate2027.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

Related Stories: