சென்னை: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த 15ம் தேதி ஆன்லைன் மூலம் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கினேன். அந்த பால் பாக்கெட்டை 18ம் தேதி திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். தனக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை உள்ளது.
குழந்தைக்கு பசுவின் பாலை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பால் பொருட்களை நம்பிக்கையுடன் வாங்கும் நுகர்வோருக்கு இதுபோன்ற சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகிறது. தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது’’ என தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
