வாட்ஸ்அப் யூசர் நேம் குறித்து மெட்டா நிறுவனம் விளக்கம்: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: வாட்ஸ்அப் யூசர் நேம் தொடர்பாக மெட்டா நிறுவனம் அளித்த விளக்கம் பற்றி ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில் இனி மொபைல் எண்களுக்கு பதிலாக யூசர் நேம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வௌியானது. ஆனால், அடையாள திருட்டு, ஆள்மாறாட்டம், டிஜிட்டல் கைது போன்ற மோசடிகள்கு வழிவகுக்கும் விதமாக இந்த யூசர் நேம் அம்சம் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு அண்மையில் மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான மெட்டா நிறுவனம் அளித்துள்ள பதிலில், “ஆள்மாறாட்டங்களை தவிர்ப்பதற்காக பிரபலங்கள், அரசு துறை சார்ந்த நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் சரி பார்க்கப்பட்ட மெட்டா கணக்குகள் ஆகியவற்றின் பெயர்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதன் உண்மையான உரிமையாளர்களால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பெயரை பயன்படுத்த முடியும்.

இதுதவிர, நன்கு அறியப்பட்ட நபர்களின் பெயர்களை ஒத்த தோற்றமுள்ள மாற்று பெயர்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் பெயர் அம்சம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், தொலைபேசி எண் என்பது அவசியமானதாக்கப்பட்டுள்ளது. எனவே, மோசடியாளர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள். இதேபோல், முகம் தெரியாத நபர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமெனில், அந்த குறிப்பிட்ட நபரின் சரியான பயனர் பெயர் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியும்.

இதேபோல் இன்னும் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், நன்மைகளும் பயனர் பெயர் அம்சத்தில் இடம்பெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் அளித்த விளக்கம் கிடைத்துள்ளது. அந்த பதில்களை ஒன்றிய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக ஏற்று கொள்ளவில்லை என தகவல்கள் வௌியாகி உள்ளன.

* ெடலிகிராம் விளக்கம்
வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து, குறுஞ்செய்தி தளமான டெலிகிராமும் பயனர்பெயர் அம்சம் குறித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: