காட்பாடி அருகே கல்புதூரில் வாலிபர் கொலையில் 9 பேர் கைது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

 

வேலூர், ஜூன் 25: காட்பாடி அடுத்த கல்புதூரில் கடந்த 21ம் தேதி இரவு கெங்கையம்மன் கோயில் திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் வண்டறந்தாங்கல் மற்றும் கல்புதூர் இளைஞர்களுக்கு திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சுந்தரியம்மன் கோயில் மைதானத்தில் இருந்து கல்புதூர் வாலிபர்களை, வண்டறந்தாங்கலைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட கும்பல் கத்தி, பாட்டில், தடிகளை கொண்டு தாக்கியுள்ளனர். அதில் அங்கிருந்த வாலிபர்கள் சிதறிஓடியுள்ளனர். அப்போது அங்கு தனியாக சிக்கிய கல்புதூர் சிவா என்பவரது மகன் தினகரனை ஆயுதங்களால் சரமாரியாக ஓட, ஓட பின்தொடர்ந்து தாக்கியுள்ளது. இதற்கிடையில் தகவல் அறிந்த காட்பாடி போலீசார் விரைந்து வந்து அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.