வேலூர், ஜூன் 18: குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் விபத்து தொடர்பான வழக்கில் மிரட்டும் தொனியில் பேசுவதாக பெண் எஸ்எஸ்ஐ மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் புகார் அளித்தார்.வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது மகன் கடந்த ஏப்ரல் மாதம் பைக்கில் சென்றபோது, எதிர் திசையில் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எனது மகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
