கல்லப்பாடி கிராமத்தில் அரசு இடத்தில் தனி நபர் ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடித்து அகற்றம் அதிகாரிகள் அதிரடி

 

குடியாத்தம், ஜூன் 25: கல்லப்பாடி கிராமத்தில் அரசு இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கட்டிய 2 அடுக்குமாடி கட்டிடத்தை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் தனி நபர் ஒருவர், அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுமார் இரண்டரை ஏக்கர் அளவில், இடத்தை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்து அதில் சுமார் 115 சதுர மீட்டருக்கு 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இதன் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதுகுறித்து வேலூர் மாவட்ட வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. அதன்படி வேலூர் மாவட்ட அப்போதைய கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் குடியாத்தம் தாசில்தார் பிரியா, இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கினார். அதில் நிலத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.