இளைஞர் அஜித் மரண வழக்கு.. உடலில் 44 காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

மதுரை: அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண கொலை வழக்கு போல் இல்லை; அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உடலின் ஒவ்வொரு பாகம் விடாமல் இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டு உள்ளார் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இளைஞர் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை டீன் தாக்கல் செய்தார். மடப்புரம் இளைஞர் அஜித் மரண வழக்கில் திருப்புவனம் மாஜிஸ்திரேட், மதுரை அரசு மருத்துவமனை டீன் ஆஜரானார்.

The post இளைஞர் அஜித் மரண வழக்கு.. உடலில் 44 காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: