2019 உலக கோப்பையில் விளையாடிய 10 அணிகளின் கேப்டன்களில் 9 பேர் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், 2023 தொடரில் வில்லியம்சன் மட்டுமே கேப்டனாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய களத்தை கருத்தில் கொண்டு ஈஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் நியூசிலாந்து 15 பேர் கொண்ட அணியை உலக கோப்பைக்காக அறிவித்துள்ளது. வில்லியம்சன் அணியுடன் இணையும் வரை, துணை கேப்டன் டாம் லாதம் அணியை வழிநடத்துவார்.
அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, வில்லியம் யங்.
The post உலக கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து அணி அறிவிப்பு: கேன் மீண்டும் கேப்டன் appeared first on Dinakaran.