டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது வெஸ்ட் இண்டீஸ்

போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. ஷாய் ஹோப் 14, ஜான்சன் சார்லஸ் 40 ரன் (31 பந்து, 6 பவுண்டரி), நிகோலஸ் பூரன் 75 ரன் (25 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் ரோவ்மன் பாவெல் 52 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஷிம்ரோன் ஹெட்மயர் 18, ஷெர்பேன் ரூதர்போர்டு 47 ரன்னுடன் (18 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 2, டிம் டேவிட், ஆஷ்டன் ஏகார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

ஜோஷ் இங்லிஸ் 55 ரன் (30 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), நாதன் எல்லிஸ் 39 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஏகார் 28 ரன் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), டிம் டேவிட், மேத்யூ வேட் தலா 25 ரன், வார்னர் 15 ரன் எடுத்து வெளியேறினர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆடம் ஸம்பா 21 ரன், ஹேசல்வுட் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் குடகேஷ் மோட்டி, அல்ஜாரி ஜோசப் தலா 2, அகீல், ஷமார், ஒபெத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பூரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 

The post டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: