கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது என அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தற்போது 9 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது. ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டராக மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி பேட்டியில் கூறியதாவது:
உளுந்தைப்பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, மைதா, ரவை உள்ளிட்ட 5 வகையான பொருட்களை பொதுச்சந்தையில் விலைக்கு வாங்கி அதனை ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில், வழங்கிய பெருமை கலைஞர் ஆட்சி காலத்தை சாரும். ஆனால் 2016-ல் ஆட்சிக்கு வந்த கடந்த ஆட்சியாளர்கள் உளுந்தைப்பருப்பு மற்றும் கோதுமை மாவை குறைத்துவிட்டனர்.

இன்றைக்கு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி, பொது விநியோக திட்டத்தின் கீழ் பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. பருப்பு, எணணெய், சர்க்கரை போல், மண்ணெண்ணெய் வாங்கி பொதுமக்களுக்கு விநியோகிக்கு நிலை இருந்தால் பொதுமக்களுக்கு தேவையான அளவு விநியோகிய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு இணைப்பு ஆகியவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மண்ணெண்ணெய் மட்டுமின்றி, ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ஜூலை 2020-ல் மாதம் தோறும் 11,485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. 2022 மே வரை மாதம் 30,647 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஜூன் 2022 முதல் மாதம் ஒன்றிற்கு 8,532 மெட்ரிக் டன் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோதுமை பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது மாதம் தோறும் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக தரவேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் அளவை குறைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை விலையில்லாமல் 30 லட்சம் பேருக்கு 2016 முதல் வழங்கிய காரணத்தால் இன்று மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைத்துள்ளனர். ஆனால் மற்ற மாநிலங்களில் எரிவாயு இணைப்பு கொடுக்கவில்லை என்றாலும் மண்ணெண்ணெய் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வாங்கிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: