எல்லோருக்கும் ஒரே ஓட்டு தானே… அம்பானிக்கும், அதானிக்கும் கோடி கோடியாய் கொடுக்குறீங்க…ஏழைகளுக்கு ரூ.3000 கொடுத்தா என்ன? மோடிக்கு எடப்பாடி கேள்வி

பெரம்பலூர் நகர் துறையூர் சாலையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியா முழுக்க நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இது இந்த நாட்டினுடைய தேர்தல். இந்த தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் இந்திய அரசு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். ஏன் கொடுக்கக்கூடாது.

இன்றைக்கு அம்பானிக்கு கொடுக்குறீங்க, அதானிக்கு கொடுக்குறீங்க, டாட்டாவுக்கு கொடுக்குறீங்க, பிர்லாவுக்கு கொடுக்குறீங்க. ஒரு ஸ்கீம்க்கு இருபதாயிரம் கோடி கொடுக்குறீங்க, மானியமாக 5 ஆயிரம் கோடி கொடுக்கறீங்க. ஏன் ஏழைகளுக்கு ரூ.3000 கொடுத்தால் என்ன தப்பு. உங்களுக்கு ஏழைகள் வாக்களித்திருக்கிறார்கள் தானே. ஏழைக்கும் ஒரு ஓட்டு தான். அந்த அம்பானிக்கும் ஒரு ஓட்டுதான்.

நீங்கள் நாட்டினுடைய பிரஜை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஒருவருக்கு அவ்வளவு மானியம் கொடுக்குறீங்க. ஒரு பேக்டரி கட்டுவதாக இருந்தால், ஒரு தொழிற்சாலை வரணும்னா பல்லாயிரக் கணக்கானகோடி மானியம் கொடுக்குறீங்க, ஒரு நபர் வாழ்வதற்காகத்தானே. அதே ஏழை மக்கள் நிறைந்த நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஏழைகள் வாழ்வு மலர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post எல்லோருக்கும் ஒரே ஓட்டு தானே… அம்பானிக்கும், அதானிக்கும் கோடி கோடியாய் கொடுக்குறீங்க…ஏழைகளுக்கு ரூ.3000 கொடுத்தா என்ன? மோடிக்கு எடப்பாடி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: