சுசீந்திரம் கோயிலில் வாகனம் சரிந்தது

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமியும், பெருமாளும் 3 முறை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாவது முறை வாகனம் வலம் வந்தபோது கோயில் உட்பிரகாரத்தில் வாகனத்தை சுமந்து சென்றவர் கால் இடறியுள்ளது. இதனால் வாகனம் திடீரென்று சரிந்தது. அதில் இருந்த விக்ரகங்களும் நிலைகுலைந்தன. பின்னர் வாகனம் சீர் செய்யப்பட்டு 3வது முறை வலம் வந்தது. சனி பிரதோஷத்தில் வாகனம் சரிந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர். இதனால் நேற்று காலை தாணுமாலய பெருமாள் சன்னதியில் பரிகார பூஜை, சிறப்பு கலச பூஜை நடத்தப்பட்டது.

The post சுசீந்திரம் கோயிலில் வாகனம் சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: