உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கிறார் ரஜினிகாந்த்

உத்திரபிரதேச: உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு லக்னோ சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த், உ.பி. துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யாவுடன் பகல் 1.30 மணிக்கு ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்தையும் முதல்வர் யோகியுடன் பார்ப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ சென்றடைந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது இது குறித்து தெரிவித்தார். தனது ஜெயிலர் படத்தைப் பார்க்க முதல்வர் யோகியுடன் லக்னோ வந்திருப்பதாக ரஜினிகாந்த் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம், இமயமலை, ஆகிய இடங்களுக்கு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு பல ஆஷ்ரமம் மற்றும் தெய்வங்களை சந்தித்துள்ளார். இதனிடையே இமயமலை பயணம் முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு ரஜினி சென்றார்.

அங்குள்ள துறவிகளை சந்தித்தார். இதனையடுத்து ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளார். மேலும், அவருடன் ஜெயிலர் படத்தை இன்று பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கிறார் ரஜினிகாந்த் appeared first on Dinakaran.

Related Stories: