பயனர்கள் இனி காணொலிகளையும் HD தரத்தில் தெளிவாக பகிரலாம்; வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்..!!

டெல்லி: காணோலிகளை HD தரத்தில் பகிரும் அம்சத்தை வாட்ஸ் ஆப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு உதவிடும் வகையில் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது காணோலிகளை HD தரத்தில் தெளிவுடன் பகிரும் அம்சம் அறிமுகமாகியுள்ளது. HD தரத்தில் படங்களை அனுப்புவது போன்றே இனி மற்றவர்களுடன் காணொலியை பகிரும் போது அதனை HD தரத்திற்கு மாற்றலாம்.

வாட்ஸ் ஆப்பில் உள்ள காணொலிகள் தரம் 480p வரை மட்டுமே இருந்த நிலையில், தற்போது பயனர்கள் 720p தெளிவுடன் வீடியோக்களை பகிரலாம். HDயில் காணொலிகளை பகிர விரும்பினால் பதிவேற்றும் போது திரையின் மேற்புறத்தில் உள்ள HD பட்டனை தட்டி பதிவேற்றலாம். ஒருவர் HD யில் காணொலியை அனுப்பினால் காணொலியின் கீழ் இடதுபுறத்தில் சிறிய HD பேஜ் தென்படும். குறுஞ்செய்திகள், அழைப்புகள் மற்றும் படங்களை போலவே பயனர்களின் காணொலிகளும் வாட்ஸ் ஆப்பின் எண்ட் டூ எண்ட் என்ஸ்கிரிப்சன் மூலம் பாதுகாக்கப்படுவதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

The post பயனர்கள் இனி காணொலிகளையும் HD தரத்தில் தெளிவாக பகிரலாம்; வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்..!! appeared first on Dinakaran.

Related Stories: