தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா

சியோல்: வட கொரியா அடிக்கடி அணு ஆயுதங்களை செய்து வருகிறது. இதனால் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. வட கொரியா கடந்த வாரம் ஏவிய உளவு செயற்கைகோள் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, குறுகிய துார ஏவுகணைகளை சோதித்து பார்த்தது. இந்த சம்பவங்களை கண்டித்து வட கொரிய எல்லை பகுதியில் தென் கொரிய நாட்டினர் துண்டு பிரசுரங்களை வீசி விட்டு சென்றுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குப்பைகளை சுமந்து செல்லும் 150 பலுான்களை தென் கொரியா மீது வட கொரியா ஏவியது.

வெள்ளை நிறத்திலான பலுான்களுடன் இணைக்கப்பட்டிருந்த பைகளில் குப்பைகள், அசுத்தமான கழிவுகள் இருந்தன. இதனால் அவற்றை தொட வேண்டாம் என நாட்டு மக்களை தென் கொரியா எச்சரித்திருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதல் மேலும் 600 குப்பை பலூன்களை வட கொரியா அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.பலூன்களில் சிகரெட் துண்டுகள், குப்பைகழிவுகள், அழுக்கு துணிகள் மற்றும் பேப்பர்கள் இருந்தன. ஆனால், அதில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த பொருட்களும் இல்லை என்றும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனிடையே ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்பும் வடகொரியாவின் செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம் தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது. மேலும், வடகொரியாவின் இந்த செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தது. இதன் எதிரொலியாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் கிம் காங் II, “எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.

The post தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா appeared first on Dinakaran.

Related Stories: