அமெரிக்கா ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தவாரம் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈராநின் அணுஉலைகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் மீண்டும் நிச்சயமாக தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் தெரிவித்தார். இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையேயென போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாகவும் அவர் 18வது முறையாக கூறியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதியிடம் இந்தியாவுடன் சண்டையிட்டால் தாங்கள் வர்த்தகம் செய்ய போவதில்லை என தான் தெரிவித்ததாகவும் அணு ஆயுதப்போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்கா – ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்தவாரம் தொடங்கும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.
