ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாநகருக்கு அருகே ரேட்கிளிப் என்ற இடம் உள்ளது. இந்தியர்கள் அதிகமாக வாழும் ரேட்கிளிப்பில் இந்து கோயில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. 4 மாடிகளை கொண்ட கோயில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதில், ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.இதில் தொழிலாளர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
