அறியப்படாத சர்வதேச வாட்ஸ்-அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம்: சென்னை போலீஸ்

சென்னை: அறியப்படாத சர்வதேச வாட்ஸ்-அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என சென்னை போலீஸ் அறிவித்துள்ளனர். நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணையும் போது, ​​வாட்ஸ்அப் பல இந்தியர்களுக்கு ஒரு தளமாக உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு தொழில்நுட்பமும் பல நன்மைகளுடன் வருகிறது, பின்னர் அதன் இருண்ட பக்கமும் உள்ளது. கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் வரும் தேவையில்லாத மோசடி அழைப்புகளை ரிப்போட், ப்ளாக் செய்யுமாறு வாட்ஸ் அப் தனது பயனர்களை கேட்டுகொண்டுள்ளது. தெரியாத எண்களில் இருந்து வரும் வெளிநாட்டு, உள்நாட்டு அழைப்புகளுக்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

பயனர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத அழைப்புகளை ப்ளாக் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. இருந்தபோதிலும் சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் அறியப்படாத சர்வதேச வாட்ஸ்-அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என சென்னை போலீஸ் தெரிவித்துள்ளனர். அறியப்படாத சர்வதேச வாட்ஸ்அப் அழைப்புகள் மக்களின் தனிப்பட்ட தரவு, வங்கிக் கணக்குக்கு ஆபத்தானதாக முடியலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அத்தகைய அழைப்புகளை மறுத்து விடுங்கள், அவை பற்றிய விவரங்களை 1930-ல் பதிவிடுங்கள். சமீப காலமாக சைபர் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறியப்படாத சர்வதேச வாட்ஸ்-அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம்: சென்னை போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: