ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை : பி.இ.,/எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணி விவரம்:

  1. Assistant Ore Dressing Officer: 22 இடங்கள் (பொது- 11, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்- 2, எஸ்சி-3, எஸ்டி-1). வயது: 35க்குள். தகுதி: Geology/Physics/Chemistry/Ore Dressing/ Mineral Processing ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
  2. Assistant Mineral Economist: 4 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, பொது-2). வயது: 35க்குள். தகுதி: Geology/Applied Geology/Economics பாடங்கள் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் அல்லது Mining Engineering பாடத்தில் பி.இ.,/பி.டெக் மற்றும் 3 வருட பணி அனுபவம்.
  3. Assistant Mining Engineer: 34 இடங்கள் (பொது-16, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-4, எஸ்டி-2). வயது: 30க்குள். தகுதி: Mining Engineering பாடத்தில் பி.இ.,/பி.டெக் பட்டம் மற்றும் 2 வருட பணி அனுபவம்.
  4. Youth Officer: 7 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 30க்குள். தகுதி: ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் என்சிசி/என்எஸ்எஸ் அல்லது இளைஞர் நலன் சார்ந்த துறையில் 2 வருட பணி அனுபவம்.

சம்பளம்: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ. 25/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தலாம். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.04.2023.

The post ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை : பி.இ.,/எம்.எஸ்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: