இதில், 167 நாடுகள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக டாப்-100 பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இம்முறை இந்தியா 66.95 புள்ளிகளுடன் 99வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 109வது இடத்தையும், 2023ல் 112வது இடத்தையும், 2022ல் 121வது இடத்தையும், 2021ல் 120வது இடத்தையும், 2020ல் 117வது இடத்தையும், 2019ல் 115வது இடத்தையும் இந்தியா பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசையில் சீனா 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும், அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் 70.5 புள்ளிகளுடன் 74வது இடத்தையும், நேபாளம் 68.6 புள்ளிகளுடன் 85வது இடத்தையும், வங்கதேசம் 63.9 புள்ளிகளுடன் 114வது இடத்தையும், பாகிஸ்தான் 57 புள்ளிகளுடன் 140வது இடத்தையும் பிடித்துள்ளன. பின்லாந்து (87.02), சுவீடன் (85.74), டென்மார்க் (85.26), ஜெர்மனி (83.67), பிரான்ஸ் (83.14) ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
The post ஐநா வளர்ச்சி தரவரிசை 99வது இடத்தில் இந்தியா: முதல் முறையாக டாப்-100ல் இடம் பெற்றது appeared first on Dinakaran.
