உயர்கல்வி நிறுவனங்களில் விதிமீறலை சரிபார்க்க புதிய குழு அமைத்துள்ளது யுஜிசி

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவதில் விதிமீறல்களை சரிபார்க்க ஒரு புதிய குழுவை யுஜிசி அமைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 568வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில், உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவதில் விதிமீறல்களை சரிபார்க்க ஒரு குழுவை அமைத்துள்ளது.

மேலும் பல்கலைக் கழகக் கல்வியை ஒருங்கிணைத்து, ஆசிரியர்களின் தரம் மற்றும் ஆராய்ச்சி பட்டங்களின் தரத்தை அவ்வப்போது உறுதி செய்வதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த குழுவானது, சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும். மேலும் ஆவணங்களைச் சரிபார்த்து, தகுந்த பரிந்துரைகளையும் வழங்கும். விதி மீறல்கள் ஏற்பட்டால் அதற்கான தகுந்த நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்யும்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் விதிமீறலை சரிபார்க்க புதிய குழு அமைத்துள்ளது யுஜிசி appeared first on Dinakaran.

Related Stories: