ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி

புதுடெல்லி: ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1.74 லட்சம் கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிதியாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இதுவரை ஜிஎஸ்டி வசூல் ரூ.5.57 லட்சம் கோடியாக உள்ளது. மே மாதம் ரூ.1.73 லட்சம் கோடி வசூலானது. ஆனால் ஜூன் மாதம் ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 8 சதவீதம் அதிகம்.

The post ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Related Stories: