டெல்லி, ஷீரடி, ஐதராபாத் செல்லும் 12 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஷீரடி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் 12 விமானங்கள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், சென்னை-ஷீரடி விமானம் 1, சென்னை-ஐதராபாத் விமானம் 1 என 6 புறப்பாடு விமானங்கள், அதேபோல், டெல்லி-சென்னை 4 விமானங்கள், ஷீரடி-சென்னை விமானம் 1, ஐதராபாத்-சென்னை விமானம் 1 என 6 வருகை விமானங்கள் ஆக மொத்தம் 12 விமானங்கள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், முறையான முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் இதைபோல் விமான சேவை திடீரென ரத்து செய்யப்படுவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

The post டெல்லி, ஷீரடி, ஐதராபாத் செல்லும் 12 விமானங்கள் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: