புவி கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது ஜப்பான்

டோக்கியோ: ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமானது புவி கண்காணிப்பு செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று புதிய முதன்மையான எச்3 ராக்கெட்டில் இருந்து மேம்படுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள் விஞ்ஞானிகளால் ஏவப்பட்டது.

இந்த புவி கண்காணிப்பு செயற்கைகோள் அல்லது ஏஎல்ஓஎஸ்-4 பூமியை கண்காணித்தல் மற்றும் பேரிடர் குறித்த தரவுகள் மற்றும் வரைபடத்தை உருவாக்குவதற்கு பணியாற்றும். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட சென்சார் மூலமாக ராக்கெட் ஏவுதல் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் திறன் கொண்டது. செயற்கைகோளை முன்னதாக ஞாயிறன்று ஏவுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக நேற்று இது விண்ணில் செலுத்தப்பட்டது.

The post புவி கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது ஜப்பான் appeared first on Dinakaran.

Related Stories: