திடீர் மாரடைப்பு காரணமாக டிவி சீரியல் நடிகர் மரணம்

மும்பை: மாரடைப்பு காரணமாக இந்தி தொலைகாட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே திடீரென காலமானார். இந்தி தொலைகாட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே (51), மும்பையின் இகத்புரியில் வசித்து வந்தார். முதலில் நடிகை அஷ்வினி கல்சேகரை திருமணம் செய்து கொண்ட நிதிதேஷ் பாண்டே பின்னர், உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த நடிகை அர்பிதா பாண்டேவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் இறந்தார். கடந்த 1990ம் ஆண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய நித்தேஷ் பாண்டே, 1995ம் ஆண்டில், தேஜஸ் என்ற படத்தில் துப்பறியும் நபராக நடித்தார். ெதாடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் நடித்து வந்தார். இவரது மறைவால் தொலைகாட்சி துறையினர் கவலையடைந்துள்ளனர். அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post திடீர் மாரடைப்பு காரணமாக டிவி சீரியல் நடிகர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: