சென்னை உள்பட 21 ஏர்போர்ட்களில் அதிவேக இமிக்ரேஷன் அறிமுகம்: அமித்ஷா தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: சென்னை உள்பட 21 ஏர்போர்ட்களில் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் -டிரஸ்டட் டிராவலர் திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் டிரஸ்டட் டிராவலர் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சென்னை ,மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, அகமதாபாத் உள்பட 21 ஏர்போர்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முன்முயற்சி திட்டமானது பயண அனுபவத்தை வேகமாகவும், எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டது.இதை நவீனமயமாக்குவதற்கும் இந்திய குடிமக்கள் மற்றும் வௌிநாடு வாழ் கார்டு வைத்திருப்பவர்களுக்கான குடியேற்ற செயல்முறை ஒழுங்குபடுத்துவது மற்றும் பயண திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாகும்.

The post சென்னை உள்பட 21 ஏர்போர்ட்களில் அதிவேக இமிக்ரேஷன் அறிமுகம்: அமித்ஷா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: