தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: ஒன்றிய அரசின் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20%-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காச நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதனை, ஒன்றிய அரசு நியமித்துள்ளது.

இதுதொடா்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்; ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகராக டாக்டா் செளமியா சுவாமிநாதன் சமூக நலன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளாா்.நாட்டில் காசநோயை வேரறுப்பதற்கான இலக்குகளை அடைவதற்கான உத்திகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை அவா் அரசுக்கு வழங்குவாா். கொள்கைரீதியான வழிகாட்டுதல்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தத் தேவையான மாற்றங்களையும் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் பரிந்துரைப்பாா்.

மேலும், காச நோய் ஆராய்ச்சி குறித்த ஆலோசனையை வழங்குவதிலும், சா்வதேச மருத்துவ நிபுணா் குழுக்களை அமைப்பதிலும் அவா் பங்களிப்பை வழங்குவாா். காச நோய் தடுப்பில் ஒன்றிய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து அவா் பணியாற்றவுள்ளாா். டாக்டா் செளமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநராகவும் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: