மெஸ்ஸி நிகழ்ச்சியில் நடந்த களேபரத்துக்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சால்ட் லேக் ஸ்டேடியத்தில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண, ஆயிரக்கணக்கான கால்பந்து ஆர்வலர்கள் திரண்டிருந்த சமயத்தில், நானும் அந்த இடத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.
ஆனால், இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் செய்த குளறுபடிகளால், சால்ட் லேக் மைதானத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். இந்த சம்பவத்துக்காக, மெஸ்ஸியிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
