மேற்குவங்கத்தில் 2 தொகுதிதான் காங்கிரசுடன் பேச திரிணாமுல் மறுப்பு: மம்தாவிடம் பேச கார்கே முடிவு

புதுடெல்லி; இந்தியா கூட்டணியில் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிதான் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் மம்தாவுடன் பேச கார்கே முடிவு செய்துள்ளார். இந்தியா கூட்டணியில் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு பணிகள் வேகம் பிடித்துள்ளது. ஆம்ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு குழு தலைவர் முகுல் வாஸ்னிக், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 42 இடங்களை பங்கீடு செய்வது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் குழுவுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 2 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் பேச்சுவார்த்தைக்கும் குழுவினரை திரிணாமுல் அனுப்பாததால் இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவிடம் பேச காங்கிரஸ் தலைவர் கார்கே முடிவு செய்துள்ளார்.

அதே சமயம் மேற்குவங்கத்தில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றால் மேகாலயாவில் ஒரு தொகுதி, அசாமில் 2 தொகுதி, கோவாவில் 1 தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திரிணாமுல் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 3 மாநிலங்களில் தொகுதி ஒதுக்கினால் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 5 தொகுதிகள் மேற்குவங்கத்தில் ஒதுக்க தயார் என்று திரிணாமுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post மேற்குவங்கத்தில் 2 தொகுதிதான் காங்கிரசுடன் பேச திரிணாமுல் மறுப்பு: மம்தாவிடம் பேச கார்கே முடிவு appeared first on Dinakaran.

Related Stories: