திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு சசிகலா உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி

சென்னை: திருச்சியில் ஏப்.24-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டுக்கு சசிகலா உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்:

திருச்சி மாநகரில் ஏப்.24-ம் தேதி அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவாகவும், ஜெயலத்தாவின் பிறந்தநாள் விழாவாகவும், கழகம் தோற்று வித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையிலும் முப்பெரும் விழாவாக திருச்சி மாநகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள அதிமுகவின் முன்னோடிகள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாட்டுக்கு சசிகலா உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

The post திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு சசிகலா உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: