கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம் எப்போதுதான் முடிவெடுப்பீர்கள்: தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பாக எப்போது தான் முடிவெடுக்கப்படும்? என்று தமிழக ஆளுநருக்கு சரமாரி கேள்வியழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க ஆளுநர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெவ்வேறு குற்றங்களுக்காக கைது செய்ப்பபட்டு நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சிக்கந்தர், ரியாசுதீன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2021ல் முடிவு செய்தது. அதற்கான ஒப்புதலை பெற கோப்புகள் அனைத்தும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,‘‘கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள சிக்கந்தர், குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரியசுதீன் உட்பட மூன்று கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூறி தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் தற்போதைய நிலை என்ன?, ஏன் இத்தனை காலதாமதம்? எப்போதுதான் முடிவெடுப்பீர்கள் என தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,‘‘இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஆளுநர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநலட ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள 2 ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைக்கு வரவுள்ளது.

The post கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம் எப்போதுதான் முடிவெடுப்பீர்கள்: தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: