×

தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம் மேற்கு வங்க உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்திருந்த மேற்கு வங்க மாநில அரசு உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, ‘‘சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது மாநில காவல் துறையின் கடமை . தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க மாநிலம் விதித்திருக்கும் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதற்கு தடை விதித்து உத்தரவிடுகிறது. அதேப்போன்று தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த திரைப்படத்தை தடை செய்யக் கூடாது.

மேலும் படத்தை தடுக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அதனை தமிழக அரசு அனுமதிக்கவும் கூடாது. மேலும் படம் பார்க்க செல்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன்,‘‘திரைப்படத்திற்கு தடை விதிக்கும் விதமாக அரசு எந்த செயலிலும் ஈடுபடவில்லை’’ என தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம் மேற்கு வங்க உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,West Bengal ,New Delhi ,Kerala Story ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...