தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை…கர்நாடகாவில் இருந்து நீரை பெற்றுதருக: விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே குறுவை நெல் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் தவிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள் கர்நாடகாவிடமிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அருகே கணபதி அக்ரகாரம், கப்பீஸ் தளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கும் மேல் குருவை நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால், தற்போது போதிய தண்ணீர் இன்றி அந்த பயிர்களும் காய்ந்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிடைக்கவேண்டிய காவிரி நீரை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 13,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. எனவே தண்ணீர் இல்லாத குறுவை நெல் பயிர்களை காக்க அரசு உரிய பயிர்காப்பீட்டு செய்து தரவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை…கர்நாடகாவில் இருந்து நீரை பெற்றுதருக: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: