பெண் போலீஸ் தற்கொலை

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் அஞ்சலி. இவர், கடந்த 2017ம் ஆண்டு கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அஞ்சலி, கணவர் செல்வகுமாருடன் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். செல்வகுமார் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆகின்றது. குழந்தைகள் இல்லாததால் கணவன், மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி அஞ்சலி மட்டும் 2 நாள் விடுப்பில் தன் கணவர் செல்வகுமாரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்திற்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது கணவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அஞ்சலி நேற்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மறவமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அஞ்சலியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் போலீஸ் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: