தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்றார் டிஆர்பி ராஜா: ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!

மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா, தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதன்பிறகு டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றதற்கான கையெழுத்திட்டார். அதேபோல் ஒப்புதல் அளிக்கும் வகையில் ஆளுநர் ஆர்என் ரவியும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

The post தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்றார் டிஆர்பி ராஜா: ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: