26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

* சென்னையில் சிபிசிஐடி ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை பெருநகர (வடக்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக ஜெ.லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் காவலர் நலப் பிரிவு ஐ.ஜி.யாக நஜமுல் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐ.ஜி.யாக ரூபேஷ் குமர் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்

* லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

* டான்ஜெட்கோ கண்காணிப்பு பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக என்.காமினி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் சி.ஐ.டி-II பிரிவு காவல் கண்காணிப்பாளராக கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை பெருநகர வடக்கு பிரிவு துணை ஆணையராக பி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் மதுவிலக்கு குற்றப்பிரிவு மத்திய நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளராக ஆர்.பாண்டியராஜன் நியமனம்

* சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்

* ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வு

* சென்னை பெருநகர பூக்கடை காவல் துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக (நிர்வாகம்) வி.ஆர்.ஸ்ரீனிவாசன் நியமனம்

* சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டுள்ளார்

* திருச்சி நகர் தெற்கு காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

* செங்குன்றம் துணை ஆணையராக பல்லா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

* திட்டமிட்ட குற்றச் செயல் நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி.யாக சிறப்பு சி.ஐ.ஷ்.. பிரிவு எஸ்.பி. எஸ்.சரவணன் கூடுதல் பொறுப்பு

* சென்னை அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி துணை இயக்குனராக தீபா சத்யன் நியமனம்

* ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்

* சென்னையில் கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்

* மாநில குற்ற ஆவணக் காப்பக காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்

* மதுரை நகர் தெற்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்

* கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக ஜெயந்தி நியமனம்

* சென்னை தெற்குச் சரக ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக வி.சரவணக்குமாருக்கு பதவி உயர்வு

* எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் வினோத் சாந்தாராம், சென்னையில் சிபிசிஐடி, சிறப்புப் பிரிவுகள் எஸ்.பி.யாக நியமனம்

* எஸ்பியாக பதவி உயர்வு பெறும் விஜேய கார்த்திக்ராஜ், சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம்

* எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறும் வி.வி.கீதாஞ்சலி, சென்னையில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம்

* சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு ஆர்.பொன் கார்த்திக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

The post 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: