தமிழகத்தில் பாஜ கூட்டணி 12 தொகுதிகளில் 2ம் இடம்

சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளில் 2ம் இடத்தையும், 23 இடங்களில் 3வது இடத்தையும், 4 தொகுதிகளில் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, வேலூர், தர்மபுரி, நீலகிரி, கோவை ஆகிய 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவி, 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், சவுமியா அன்புமணி ஆகியோர் 2ம் இடம் பிடித்தவர்கள் ஆவர்.

அது மட்டுமல்லாமல் அரக்கோணம், ஆரணி, வடசென்னை, சிதம்பரம், கடலூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், பொள்ளாச்சி, சேலம், சிவகங்கை, பெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 23 தொகுதிகளில் 3வது இடம் பிடித்துள்ளனர். மேலும் ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை, தூத்துக்குடி ஆகிய நான்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 4வது இடம் பிடித்துள்ளனர்.

The post தமிழகத்தில் பாஜ கூட்டணி 12 தொகுதிகளில் 2ம் இடம் appeared first on Dinakaran.

Related Stories: