மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் ஒருவர் விபத்தில் பலியான விவகாரத்தில், உத்தரபிரதேச அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதிக்கு உட்பட்ட சுக்பால் நகரின் செங்கல் சூளை அருகே செய்தி சேனல் நிருபர் சுலப் வஸ்தவா (42) என்பவர் பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘அலிகார் முதல் பிரதாப்கர் வரை மதுபான மாபியாக்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. ஆனால் மாநில அரசு அமைதியாக உள்ளது. மதுபான பாபியாக்களின் அட்டூழயத்கை ஊடகத்தினர் வெளிக்கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கான ஆபத்துகள் குறித்து மாநில அரசிடம் எச்சரிக்கிறார்கள். நிருபர் சுலப் வஸ்தவா குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு உத்தரபிரதேச காட்டாட்சி அரசிடம் இருந்து ஏதேனும் பதில் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தனது உயிருக்கு மதுபான மாபியாவால் அச்சுறுத்தல் இருப்பதாக பிரயாக்ராஜ் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநருக்கு சுலப் வஸ்தவா கடிதம் எழுதினார். இந்த நிலையில் விபத்தில் சிக்கி சுலப் வஸ்தவா உயிரிழந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர திவேதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: