ஒரு பொண்ண மாசமாக்கி அபார்சன் பண்ணிட்டாரு… பாஜ நிர்வாகியின் காம களியாட்டம்: திருச்சி சூர்யா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

மதுரை: பாஜ நிர்வாகியின் காம களியாட்டம் என்று திருச்சி சூர்யா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜ ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா, கடந்த 2022ம் ஆண்டு பாஜ சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக நவம்பர் 2022ல் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு கட்சியில் இணைக்கப்பட்ட அவருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, அண்ணாமலை தலைவரான பிறகுதான் ரவுடிகள் கட்சியில் அதிக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தற்கு பதில் அளித்து திருச்சி சூர்யா, ‘குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டது தமிழிசை பரிந்துரையில் மாநில தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான்’ என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி சூர்யா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வௌியிட்டுள்ள பதிவில், ‘இனி பாஜவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது’ என தெரிவித்தார். தொடர்ந்து, தலைமைக்கு எதிராக செயல்பட்ட தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சாதி அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?. அக்கா தமிழிசையின் நீண்ட ஊழலுடன் விரைவில் சந்திக்கிறேன். இந்த தம்பியின் மறுபக்கத்தை அண்ணாமலை பார்ப்பார் என்று அடுத்தடுத்து பதிவுகளை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ‘‘மதுரை பாஜ நிர்வாகிகள் பேசிக்கொண்ட தொலைபேசி உரையாடல் வைரல். பாஜ மாநில பொதுச்செயலாளர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு (சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்) காம களியாட்டம், மதுரையில் பாஜவினர் இவரது பெயருடன் காமத்தையும் சேர்ந்து அழைக்கிறார்களாமே? விரைவில் அவரைப் பற்றிய அடுத்தடுத்து..’’ என குறிப்பிட்டு அவரது படத்துடன், ஒரு ஆடியோவை திருச்சி சூர்யா வெளியிட்டுள்ளது பாஜவில் புயலை கிளம்பி உள்ளது.

திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள ஆடியோ பாஜ நிர்வாகிகள் இருவர் பேசியதாவது: ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் பாட்டுக்கு போற போக்கெல்லாம், பின்னால போயி பண்ணிக்கிட்ட இருந்தா என்ன அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம். பிழைச்சுக்கிட்டாப்புல… பிழைப்பு, பிரச்னையாகி, தெரியுமா விஷயம்,. 2016லயா… இல்லை 2019ம் ஆண்டு தேர்தலுக்கு அடுத்துன்னு தான் நினைக்கிறேன். அந்தாளு அப்பன் திருப்பதியைச் (மதுரை) சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்து, அந்த பொண்ணு மாசமாயிருச்சு. அத அபார்சன் பண்ணி பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. இப்படி இருக்கிற ஆளுக்கு தான் கட்சியில சீட் குடுக்குறாங்க பாருங்க. இவரால், கட்சி தோற்கபோகுது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், 20 இடங்களில் மதுரை தான் முதலில் தோல்வியடைய போகிறது. வேட்பாளருக்குனு ஒரு செல்வாக்கு இருக்கு. அதுல முதல் விஷயம் ஒழுக்கமா இருக்கனும். தான்பாட்டுக்கு போற போக்கெல்லாம் இப்படி பண்ணிகிட்டு இருந்தா என்னாகும். இவ்வாறு உரையாடல் முடிகிறது.

இந்த ஆடியோ நேற்று மதியம் 3 மணியளவில் பதிவிடப்பட்ட நிலையில் தற்போது வரை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த ஆடியோ பாராளுமன்ற தேர்தலுக்கும் முன்னதாக பேசப்பட்டதாக உள்ளது. இதுகுறித்து விபரம் கேட்க பொதுச்செயலாளரை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஏற்கனவே பாஜ நிர்வாகிகள் பலரது ஆபாச வீடியோ வெளியானது. பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக நிர்வாகியுடன் விழுப்புரம் மாவட்ட பாஜ தலைவர் கலிவரதன் பேசும் ஆபாச ஆடியோ வெளியானது. சமீப காலமாக பாஜவில் பாஜ நிர்வாகிகள் பாலியல் ஆடியோ அடுத்தடுத்து வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரு பொண்ண மாசமாக்கி அபார்சன் பண்ணிட்டாரு… பாஜ நிர்வாகியின் காம களியாட்டம்: திருச்சி சூர்யா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: